— அம்பேத்கர்
கல்லூரியில் பல கனவுகளோடு நுழைந்து இருக்கக்கூடிய மாணவர்களின் எண்ணங்கள் சமூக ஊடகங்களின் தாக்கங்களினால் நிஜமாவதில் பல சவால்களில் எழுகின்றன. இன்று சமூக ஊடகம் மாணவர்கள் பலரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் நிலையில் புத்தக வாசிப்பு என்பது பெரும் கனவாகவே மாறி இருக்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணமும் ஆழமும் சமூகத்தின் பல பரிமாணங்களையும் மிக ஆழமாகவும் முற்றிலும் புதிய நோக்கிடனும் பெரும் தாக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதை மாணவர்களின் கட்டுரைகள் எனக்கு உணர்த்தின.
வகுப்பறையின் எல்லைகளைத் தாண்டி, சமூக நிகழ்வுகளை மொழியாற்றல் துணைக்கொண்டு பதிவு செய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் தீட்டியுள்ள ஒவ்வொரு வண்ணக்கோடும் வெறும் வார்த்தை ஓவியங்கள் அல்ல. அவர்களின் இளமைக்கால சமூகத்தின் சாட்சியங்கள்… சிந்தனைகளின் பிரதிபலிப்பு.
இக்கட்டுரைகள் இந்தச் சமூகத்தின் மீதான மாணவர்களின் அக்கறையையும், அவர்கள் உள்ளத்தின் அறிவுத்திறனின் பெரும் பாய்ச்சலையும் அதேசமயம் பேரன்பையும் மிக நேர்த்தியாக பறைசாற்றுகின்றன. வார்த்தைகளால் வடிக்க முடியாத பேராற்றலை, இந்த எளிய வாக்கியங்கள் மிக லாவகமாகக் கடத்திவிட்டன. மாணவர்களின் விரல் நுனிகளில் சமூக அவலங்களும் அழகும் ஒரே தருணத்தில் நடனமாடுவதை இப்பொறுப்பாசிரியராக நான் பெருமிதத்தோடு காண்கிறேன்
இதில் மாணவர்கள் இணையத்திலிருந்து தகவல்களை திரட்டி இருப்பினும் அவற்றைத் தொகுத்த விதம் அச்செய்திகளின் கூர்மை அவற்றை இணைத்த பாங்கு இவை எல்லாம் தொழில்நுட்பத்தை இன்றைய மாணவர்கள் நேர்மையாக பயன்படுத்துவதை எனக்கு உணர்த்தி பெரும் மகிழ்வைத் தந்தது
மலையை தொட துடிக்கும் சிறு பட்டாம்பூச்சியின் முயற்சி தான்…
பறந்து தான் பார்க்கலாமே….
மகிழ்வோடு
மான்விழி ரஞ்சித்
பொறுப்பாசிரியர்
மாணவர் பக்கம்