என்னுடைய ஊரில் ஒரு சிறுமி இருந்தாள். அவள் மிகவும் சுறுசுறுப்பானவள் மிகவும் அன்பாய் நடந்து கொள்பவள். அழகானாவள் விளையாட்டுத்தனமாகவே இருந்தாள்.அவள் அதிகமாக பேச மாட்டாள். பள்ளி செல்ல வேண்டிய நேரம் வந்தது. அவளை எல்கேஜி வகுப்பில் சேர்த்தனர் அவள் வகுப்பு ஆசிரியர் வெண்ணிலா ஆசிரியர் தாயைப் போன்று அனைத்து குழந்தைகளையும் நேசிப்பவர்கள் தான் ஆசிரியர் ஆனாலும் என்னவோ தெரியவில்லை அச்சிறுமியின் மீது தனிப்பட்ட ஈர்ப்பு இருந்தது பின்னர் அவள் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தாள். மெல்ல கற்கும் சிறுமியாக இருந்தாள். ஒரு முறை தமிழ்ப் பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றதால் பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்று தமிழ் ஐயா கூறினார். கண்டித்து இனி நான் சரி செய்து கொள்கிறேன் என்று அச்சிறுமி அழுதப்படியே கூறினாள். சரி ஒரு வாய்ப்பு அளிக்கிறேன் என்று அய்யா கூறினார். அதன் பிறகு வீட்டில் அருகாமையில் ராஜேந்திரன் ஐயா ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஐயா இருந்தார் அவரிடம் சென்று படிக்க பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார். அதன் பிறகு படிப்பில் மிகவும் ஈடுபாடு வந்தது நன்றாக படித்தால் நல்ல மதிப்பெண்ணையும் பெற்றாள் அவள் தமிழ் பாடத்தில் ஆர்வம் காட்டினாள். கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை எடுத்து கல்லூரி வாழ்க்கை தொடங்கினாள் ராஜேந்திரன் அய்யா அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் ஏனெனில் ராஜேந்திரன் அய்யா தான் தமிழ் நன்றாக வரும் நம்பிக்கையுடன் படி என்று அவளுக்கு கூறினார் மாணவி தமிழ்த் துறையில் எல்லா போட்டிகளிலும் பங்கேற்று சான்றிதழ் பெற்று ஆசிரியரையும் பெருமைப்படுத்தினாள். இந்த மாணவி கல்லூரியில் படித்துக் கொண்டே இருக்கிறாள் இந்த மாணவி வேறு யாருமல்ல ..நான்தான் .
என்னுடன் படிக்க விரும்பிய வேறு சில பெண்களுக்கு கல்லூரியில் படிக்க பொருளாதார தடைகள் இருந்தன…
இந்த உலகில் வாழ்வதற்கான அடிப்படை கல்வியைகூட பெற முடியாமல் வழி மாறும் சூழல் பலருக்கு உள்ளது…
திசை மாறும் பறவையாய் திரிந்த என்னை மடை மாற்றிய பெருமை எங்கள் ஆசிரியர்களையே சாரும் …
ஒரு ஆசிரியரின் வார்த்தை….
ஒரு மனிதனின் வாழ்க்கை…
வாழ்வை மாற்றும் மந்திரச் சொற்களை சொல்லும் பூ ஒரு ஆசிரியரின் வார்த்தை ஒரு மாணவியின் வாழ்க்கையை மாற்றியது தான் ஆசிரியரின் மகிமையாகும்.