கனவு – வெற்றியின் விதை

ஒரு மனிதனின் வாழ்க்கையில் “கனவு” என்பது ஒரு சிறிய விதை போன்றது. அது நம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் வளர்ந்து, ஒருநாள் வெற்றியாக மலர்கிறது. அந்த உண்மையை எனக்கு உணர்த்தியது என் தோழியின் வாழ்க்கையே. டாக்டராக வேண்டும் என்ற அவளது சிறுவயது கனவு, இன்று நனவாகி நிற்கிறது.

சாதாரண குடும்பத்தில் பிறந்த அவள், சிறு வயதிலிருந்தே உயர்ந்த இலக்குகளை கொண்டிருந்தாள். நோயால் அவதிப்படும் மக்களைப் பார்த்தபோது, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவளுள் வேரூன்றியது. அந்தச் சின்ன எண்ணமே, “நான் டாக்டராக வேண்டும்” என்ற உறுதியான கனவாக மாறி, அவளது வாழ்க்கையின் பாதையைத் தீர்மானித்தது.

ஒரு மருத்துவராக உயர வேண்டும் என்ற இலக்கை அடைய, கல்வி மட்டுமே போதாது என்பதை அவள் உணர்ந்தாள். அதனால், பாடப்பயிற்சியுடன் சேர்த்து பல்வேறு திறன்களையும் வளர்த்துக் கொண்டாள். அவளது உழைப்பும் அர்ப்பணிப்பும், அவளை வெற்றியின் உச்சிக்குக் கொண்டு சென்றன.

அவளது பயணம் எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமைந்தது. நான் தற்போது பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வருவதுடன், டி.சி.ஏ. (Diploma in Computer Applications) படிப்பையும் கற்றுள்ளேன். இதன் மூலம் கணினி அறிவும் தொழில்நுட்ப திறன்களும் வளர்ந்துள்ளன. மேலும், பத்திரிகைத்துறையில் உள்ள ஆர்வம், எனது எழுத்துத் திறன், பேச்சுத் திறன் மற்றும் சிந்தனைகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறனை மேம்படுத்தியுள்ளது. அதோடு, ஆங்கில மொழித் திறனையும் தொடர்ந்து வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.

என் பெற்றோர் பல கஷ்டங்களைச் சந்தித்தும், என்னை கல்வியில் முன்னேற்ற முயன்றுள்ளனர். பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், என் கனவுகளை அவர்கள் ஒருபோதும் தடுக்கவில்லை. அவர்களின் தியாகமும் ஆதரவும் தான் எனது பலம்.

என் பயணத்தில் சமூக சவால்களும் இருந்தன. “பெண்ணால் இது முடியாது” என்ற கருத்துகள் பல இடங்களில் கேட்டன. ஆனால் அவை என்னைத் தடுக்கவில்லை; மாறாக, மேலும் உறுதியுடன் முன்னேறத் தூண்டின. பல இரவுகள் தூக்கமின்றி உழைத்தேன். தோல்விகள் வந்தபோதும், அவற்றை பாடங்களாக ஏற்றுக் கொண்டு முன்னேறினேன். அந்த முயற்சிகளின் பலனாக, இன்று நான் பட்டதாரியாக நிற்கிறேன்.

என் வாழ்க்கையின் முக்கிய இலக்கு, மக்களுக்கு சேவை செய்வதே. குறிப்பாக ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது என் உள்ளத்தின் ஆழ்ந்த விருப்பமாகும். என் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

உழைப்பு, நம்பிக்கை, உறுதி இந்த மூன்றும் இருந்தால் எந்தக் கனவும் நனவாகும்.
“கனவு கண்டேன்… போராடினேன்… இன்று சாதித்தேன்…” என்ற வரிகள் என் மனதில் ஒலிக்கின்றன.

என் தோழியின் வாழ்க்கை எனக்கு ஒரு பாடமாக அமைந்தது.
அதேபோல், என் வாழ்க்கையும் மற்றவர்களுக்கு ஒரு ஊக்கமாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *