வாழ்வின் அனைத்து இன்பங்களையும் பெற பொருளாதாரம் அன்றும் இன்றும் என்றும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஐடி போன்ற துறைகளில் நுழைவதற்கு நேரம் உடல் உழைப்பு ஆகியவை அதிகமாக தேவைப்படுவதால் நான் அரசு பணியை தேர்ந்தெடுத்தேன். அரசு பணியில் இணைய தமிழ் இலக்கியம் பயின்று போட்டித் தேர்வுகளை எளிமையாக எதிர்கொள்ளலாம் என்ற கனவோடு என்னுடைய போட்டித் தேர்வு பயணத்தை ஆரம்பித்தேன். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஒரு மாணவியாக நான் என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.இன்றைய போட்டித் தேர்வுகளின் உலகம் ஒரு மிகப்பெரிய ‘சதுரங்க வேட்டை’ போல மாறியுள்ளது. வெறும் அறிவு மட்டுமே போதாது, வேகம், துல்லியம் மற்றும் மன உறுதி ஆகிய மூன்றும் இணைந்தால் மட்டுமே இன்றைய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலையில் நாங்கள் இருந்து வருகிறோம்.
தற்போதைய போட்டித் தேர்வுகளின் போக்கு மற்றும் மாணவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம்.
தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஆனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதே விகிதத்தில் உயருவதில்லை.
UPSC, TNPSC (Group 4), மற்றும் RRB போன்ற தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 20% முதல் 30% வரை அதிகரித்துள்ளது.
புள்ளிவிவரம்: ஒரு சராசரி அரசுத் தேர்வில், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு வெறும் 0.1% முதல் 0.5% வரை மட்டுமே உள்ளது. அதாவது 1000 பேரில் ஒருவரோ அல்லது இருவரோ தான் தேர்வாகிறார்கள்.
முன்பெல்லாம் 60-70% மதிப்பெண்கள் எடுத்தாலே வேலை கிடைத்துவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.
வினாத்தாள் கடினமாக இருந்தாலும், மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மிகச்சிறப்பாகத் தயாராவதால் கட்-ஆஃப் குறையவே மாட்டேன் என்கிறது.
பல தேர்வுகளில் 85% க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும் என்ற நெருக்கடி உள்ளது.
மனப்பாடம் செய்யும் கல்வி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நேரடியான கேள்விகளுக்குப் பதிலாக, கூற்று மற்றும் காரணம் பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுப்பது போன்ற ஆழமான புரிதலைச் சோதிக்கும் கேள்விகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது கல்வி கற்க கூடிய மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இது மாணவர்களின் நேரத்தை அதிகம் செலவழிக்க வைக்கிறது. மணிநேரத்தில் 200 கேள்விகள் என்ற வேகத்தை எட்டுவது பெரும் சவாலாக உள்ளது. கற்றவர், கல்லாதவர் என்ற நிலை மாறி சில சமயங்களில் எதையும் படிக்காமலே வந்து அதிர்ஷ்டத்தினால் வெற்றி பெறுபவர்களும் இதில் இருக்கிறார்கள்.
மன அழுத்தம் மற்றும் பதட்டம் 70% மாணவர்கள் தேர்வுக்கு முன் கடுமையான அழுத்தத்தை உணர்கிறார்கள்.
நேர மேலாண்மை 60% மாணவர்கள் தங்களுக்கு விடை தெரிந்திருந்தும் நேரமின்மையால் வினாக்களைத் தவிர்க்கிறார்கள்.
தகவல் சுமை (Information Overload) இணையத்தில் கொட்டிக்கிடக்கும் அதிகப்படியான தகவல்களால் எதைப் படிப்பது என்ற குழப்பம்.
நிதி நெருக்கடி நீண்ட காலத் தயாரிப்பு (2-3 ஆண்டுகள்) மாணவர்களின் பொருளாதார நிலையைப் பாதிக்கிறது.
இவ்வளவு பிரச்சனைகளைத் தாண்டி போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவோம் என்கின்ற நம்பிக்கையோடு நான் என் பயணத்தை தொடங்குகிறேன் நீங்களும் வாருங்கள் என்னோடு…